தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சி.எஸ்.ஆர் நிதி மூலம் நேற்று (13.03.2025) காலை இரண்டு லட்சம் மதிப்புள்ள ஸ்ட்ரெக்சர்களை ஆட்சியர் இளம் பகவத், அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தார்.


தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பல்வேறு உபகரணங்களை அரசு வழங்கினாலும் சி.எஸ்.ஆர் நிதி மூலம் தனியார் நிறுவனங்களும், அவ்வப்போது உபகரணங்களை வழங்கி வருகிறது.

அதன்படி நேற்று காலை சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 16 ஸ்ட்ரெக்சர்களை நன்கொடையாக நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி ஆட்சியர் இளம் பகவத் தலைமை வகித்து அவரும் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயரும் இணைந்து முதன்மை மருத்துவர் சிவக்குமாரிடம் ஸ்ட்ரெக்சர்களை வழங்கினர். தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பத்மநாபன், ஆர்.எம்.ஓ சைலஸ் ஜெபமணி மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.