தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மாப்பிள்ளையூரணி ஊராட்சி மேற்கு காமராஜர் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலைமையை நேரில் அறிய ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மழைநீரில் நடந்து சென்று பாதிப்புகளை பார்வையிட்டார்.
மழைநீர் அதிகமாக தேங்கியுள்ள இடங்களில் இருந்து மின்மோட்டார் மூலம் விரைவாக நீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு கூறினார். மேலும் பள்ளமாக உள்ள சாலைகளை சரளமாக்கும் பணிகள் நடைபெற்றுவரும் பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக செல்லும் வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இம்மாவட்ட ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைக்கோட்ராஜா, பணி மேற்பார்வையாளர் சோமு, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் T.T.C ராஜேந்திரன், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ், இளைஞர் அணி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
“மழைநீரில் கால் நனைத்து மக்கள் பக்கம்… மாப்பிள்ளையூரணியில் நிலைமையை நேரில் ஆய்வு செய்த எம்எல்ஏ சண்முகையா”
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தீபம் ஏற்ற தடை – திருப்பரங்குன்றம் மலையில் அரசியல் சூடு உச்சம்!”
அடுத்த
கார்த்திகை பௌர்ணமியில் ஆன்மிக ஒளி பரவியது – பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு கோட்டையில் ஸ்ரீ வீரசக்கதேவி ஆலயத்தில் பக்தர்களின் திரளான பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026