தூத்துக்குடி மாநகராட்சியில் மழைக்கால பணிகளை மேயர் ஜெகன்பொியசாமி காரை விட்டு விட்டு, இருசக்கர வாகனத்திலும் கால்நடையிலும் சென்று ஆய்வு செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மழைக்காலத்தில் நீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மேயர் ஜெகன்பொியசாமி அதிகாலை முதல் 3 வார்டுகளுக்குள் சென்று ஒவ்வொரு கால்வாயையும் பார்வையிட்டார். ரயில்வே தண்டவாளம், சந்தை ரோடு, எஸ்பிஜி கோவில், வ.உ.சி சந்தை, அந்தோனியார் கோவில், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் அடைப்புகளை கண்டறிந்து உடனடியாக அதிகாரிகளுக்கு சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
அதிகாரிகளிடம் மட்டும் அல்லாமல், பொதுமக்களிடமும் நேரடியாகப் பேசி, சாலை வசதிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் குறித்து கேட்டறிந்தார்.
“மாநகர மக்களுக்காகவே எனது பணி. எந்த வழியிலாவது அதை செய்து முடிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தது மக்களிடையே மேலும் பெருமையைக் கூட்டியது.
பொதுவாக கார் பவனியில் ஆய்விற்கு செல்லும் நிலையை மாற்றி, பைக் ரைடு ஆய்வு மேற்கொண்ட மேயர், அதிகாலை 4 மணி நேரம் சிறு குறு சாலைகளுக்குள் சென்று பார்வையிட்டது தற்போது தூத்துக்குடி முழுவதும் பேசப்படும் விஷயமாக உள்ளது.
தூத்துக்குடி
“மேயரின் பைக் ரைடு ஆய்வு” – தூத்துக்குடி மக்களிடம் பாராட்டைப் பெற்ற ஜெகன்பொியசாமி!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி நகர முன்னேற்றத்திற்காக – மேயர் ஜெகன் பெரியசாமி தூர் வாரும் பணிகளை ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026