தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 363 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முன்னேற்ற நிலையை நேரில் ஆய்வு செய்ய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி. இன்று மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சுனாமி காலனி, குறுக்குச்சாலை, சந்திரகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் நீரேற்றும் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரிசோதனைக்குப் பிறகு பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து, உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தூத்துக்குடி சுற்றுவட்டார மக்களுக்கு நீண்டநாள் நீர்விநியோகப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
“363 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் மாபெரும் திட்டம் — தூத்துக்குடியில் நீர்த்தேக்கத் தொட்டிகள், நீரேற்ற நிலையங்களை பார்வையிட்ட கனிமொழி கருணாநிதி”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தென் மண்டல தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் – கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது”
அடுத்த
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மாற்று வாய்ப்புகள் — தூத்துக்குடியில் மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரிப்பு, கடற்பாசி வளர்ப்பு பயிற்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026