தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியிருந்தது. இந்த நிலையை கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் மழை நீர் விரைவாக வெளியேறிட கூடுதலாக ஒரு மின் மோட்டர் அமைப்பதற்கான நடவடிக்கைகளைப் பார்வையிட்டு நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேயர் ஜெகன் பெரியசாமி.

மழைநீர் தேக்கம் காரணமாக மக்கள் எதிர்கொண்ட சிரமங்களை தீர்க்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய மின் மோட்டர் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், தேங்கியிருக்கும் நீர் விரைவில் வெளியேற்றப்படும் எனவும் மேயர் தெரிவித்தார்.

மாநகராட்சி துறையினருக்கு தேவையான பணிகளை துரிதமாக நிறைவேற்ற உத்தரவு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.