தூத்துக்குடி மாவட்ட அரசியல் அரங்கில் புதிய திருப்பமாக, சமத்துவ மக்கள் கழகம் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்து, அதற்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வழக்கறிஞர் திரு. A. அந்தோணி பிச்சை (MA, BL) போட்டியிடுகிறார். திருவைகுண்டம் தொகுதியில் திரு. S. ஜெபராஜ் டேவிட் (BE), திருச்செந்தூர் தொகுதியில் திரு. B. அருண் சுரேஷ் குமார் (BA) ஆகியோர் களமிறங்குகின்றனர். மேலும், ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் திருமதி S. ராஜாத்தி போட்டியிட, கோவில்பட்டி தொகுதியில் வழக்கறிஞர் திரு. M.A.M. சகாயராஜ் (BA, LLB) மற்றும் விளாத்திகுளம் தொகுதியில் திரு. P. கண்டிவேல் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


இந்த ஆறு தொகுதிகளுக்குமான வேட்பு மனுக்கள் இன்று பெறப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, வரும் 4.4.2026 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு, அந்தந்த தொகுதி ஆர்.டி.ஓ அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னிச்சையான போட்டி மூலம் வாக்காளர்களிடம் நேரடி ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த முடிவு, மாவட்ட அரசியலில் புதிய மாற்றத்தையும் போட்டி சூழலையும் உருவாக்கும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.