அகில இந்திய துறைமுகங்களின் விளையாட்டு கட்டுப்பாட்டு குழு மற்றும் வ.உ.சி துறைமுக விளையாட்டு குழுவினரால் 40 வது அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கிடையேயான கபடி போட்டி நடந்தது.
விளையாட்டுப் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை துறைமுக பள்ளி மைதானத்தில் 3 நாட்கள் நடந்தது. பெரிய, பெரிய துறைமுகங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று ஆர்வமாக விளையாடியது. இறுதிப்போட்டி நேற்று மாலை நடைபெற்றது.
போட்டியில் இந்திய பெருந்துறைமுக கபடி அணிகளான நியூ மங்களார், பாரதீப்,, மும்பை, விசாகப்பட்டினம், சென்னை, தீனதயால், ஜவகர்லால்நேரு துறைமுகம், மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம், உள்ளடக்கிய எட்டு பெரிய துறைமுகங்களின் கபடி விளையாட்டு அணியினர் இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர்.
நேற்று மாலை இறுதி போட்டி நடைபெற்றது. போட்டியில் மும்பை அணியும், சென்னை அணியும், மோதிக்கொண்டன இறுதியில் சென்னை துறைமுக அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இறுதிப் போட்டியை தூத்துக்குடி துறைமுக சேர்மன் சுசாந்த குமார் புரோகித் துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு அவரது மனைவி வெற்றிக்கோப்பை, பதக்கங்கள், மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
விளையாட்டு
துறைமுகங்களுக்கிடையான கபடி போட்டி - சென்னை துறைமுக அணி முதல் பரிசு!!
Admin
1 நிமிட வாசிப்பு