தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு புதிய பேருந்து சேவையை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் இருந்து புதிய பேருந்து சேவையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் ஸ்மார்ட் சிட்டி பேருந்து (பழைய பேருந்து) நிலையத்தில் இருந்து இன்று (06.04.2025) காலை தூத்துக்குடியில் இருந்து சாயல்குடி வழியாக வேளாங்கண்ணியும், தூத்துக்குடியில் இருந்து சாயர்புரம் வழியாக ஏரலும், தூத்துக்குடியில் இருந்து சாயர்புரம் வழியாக செபத்தையாபுரம் வழியாகவும், கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டு வெள்ளாங்கோட்டைக்கு செல்ல இருக்கும், புதிய பேருந்து சேவையை (வேளாங்கண்ணி செல்லக்கூடிய பேருந்தை தவிர்த்து) மற்ற மூன்று மகளிர்கான விடியல் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிளை மேலாளர்கள் ரமேஷ் கார்த்தி, ரமேஷ் பாபு, ஜெகநாதன், தொமுச மத்திய சங்க பொருளாளர் முருகன், தொமுச நிர்வாகிகள் கருப்பசாமி, லிங்குசாமி, முருகன், மனோகரவேல், சரவணன், படையப்பா கணேஷ், ராஜேந்திரன், சரவணன், சந்திர சேகர், நாகராஜ், முத்து ராஜ், உலகநாதன், சுந்தர் ராஜ், பாட்ஷா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் அருண் குமார், கிழக்கு மண்டல தலைவி கலைச்செல்வி, கவுன்சிலர் கந்தசாமி, பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார், மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் இருந்து புதிய பேருந்து சேவையை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி சமக மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து முதல்வருக்கு நன்றி!!
அடுத்த
தமிழ்நாட்டுக்கு பிரதமர் வருகை - எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026
இம்மானுவேல் சேகரன் 102-வது பிறந்த நாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!
09 Oct 2026
தலைமைத் தேர்தல் ஆணையரைக் கண்டித்து அக்.14-ல் ஆர்ப்பாட்டம்!!
09 Oct 2026