தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.


இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி துணை ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் நிலவி வரும் குடிநீர், சாலை, வடிகால், மின்விளக்கு, தூய்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை பொதுமக்கள் மனுக்களாக வழங்கினர்.


பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரில் பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, அவற்றை பரிசீலனை செய்து துறை சார்ந்த அதிகாரிகளின் மூலம் உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் முழு கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.


இந்த கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையர், மண்டல தலைவர், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.