திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் குற்றஞ்சாட்டினார்.

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது பொற்கால ஆட்சி தந்த அதிமுக பொதுச் எடப்பாடி. கே. பழனிச்சாமி அவர்களை பற்றி தவறான கருத்தை பதிவு செய்து இருக்கிறார்கள். எடப்பாடி யார் பற்றிய கருத்துக்கள் மிகவும் தவறானது.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில அமைப்பாளர் டிஆர்பி ராஜா தவறான கருத்துக்களை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். இதை உடனே அவர் திரும்ப பெற வேண்டும். அதோடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் எடப்பாடி யார் ஆலோசனை பெற்று மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

பாஜக அதிமுக கூட்டணி பற்றி விமர்சனம் செய்வதற்கு திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது. பாஜகவோடு இவர்கள் கூட்டணி வைத்து கொண்டு மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லையா, தற்போது தமிழக முதல்வராக இருக்கக்கூடிய மு.க. ஸ்டாலின் ஒரு பலவீனமான முதல்வர், தமிழகத்திற்கு என்ன திட்டங்களை வகுத்திருக்கிறார்.

புரட்சி தலைவி அம்மா அவர்களால் ஏழை எளிய மக்களுக்கு கொண்ட திட்டங்களை எடப்பாடி யார் ஆட்சியில் நான்கு ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்தது. முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அம்மா கொண்டு வந்த அனைத்து திட்டங்களை செயல்படுத்தாமல் முடக்கி கிடப்பில் போட்டுவிட்டார். திமுக சார்பில் 500 க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது.

அதை ஒன்றை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை, தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமைகள் நடைபெற்று வருகிறது. பேப்பரை எடுத்தாலே பாலியல் வழக்கில் குற்றவாளிகள் கைது என்று தான் வருகிறது. 80 வயது நிரம்பிய முதாட்டியையும் இந்த பாலியல் குற்றவாளிகள் விடுவதில்லை, அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. திமுகவினர் தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் செய்யவில்லை. அதிமுக மட்டுமே அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் வகையில் நல்லாட்சியை வழங்கியது என்றார்.