தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் மற்றும் எஸ்.ஆர். இருதய சிகிச்சை மையம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மற்றும் இருதய பரிசோதனை மருத்துவ முகமானது இன்று காலை பனிமய மாதா ஆலய முதல் உதவி மையம் (கோவில் கலையரங்கம்) அருகில் வைத்து நடைபெற்றது.

டாக்டர் சகாய பிரான்ஸிஸ் அகிஸ்டன் முன்னிலையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை பனிமய மாதா பேராலய அதிபர் ஸ்டார்வின் துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு பரிசோதனை, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஸ்கிரீனிங் எக்கோ மற்றும் HBAIC பரிசோதனை, பிறவி இருதய குறைபாடு பற்றிய ஆலோசனை, இதய மருத்துவரின் ஆலோசனை போன்ற மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.

இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் மற்றும் எஸ்.ஆர். இருதய சிகிச்சை மையம் சிறப்பாக செய்திருந்தனர்.


