தூத்துக்குடியில் நெல்லை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த வாசிப்பை நேசிப்போம் புலனக்குழு ஆசிரியர்களின் "ஆசிரியர்கள் சங்கமம் 4.0" நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் தலைமை வகித்தார். இதில் "ஆசிரியர்கள் கற்பித்தலில் புதுமைகள்", "வாசிப்பு நம்முள் ஏற்படுத்திய மாற்றங்கள்", "நேர்மறைப் பள்ளிச் சூழலும் ஆசிரியர்களின் பணிக் கலாச்சாரமும்" ஆகிய தலைப்புகளில் பயனுள்ள கருத்தரங்குகள் நடைபெற்றன.



மேலும், ஆசிரியர்கள் எழுதிய நூல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் தங்கத்துரையரசி மற்றும் "கலகல வகுப்பறை" சிவா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர்.



கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வித் துறையில் புதுமையான கற்பித்தல் முறைகள், வாசிப்பு பழக்கத்தின் அவசியம் மற்றும் மாணவர்களுக்கு நேர்மறையான கற்றல் சூழலை உருவாக்குவது குறித்து கருத்துகள் பகிரப்பட்ட இந்த நிகழ்ச்சி ஆசிரியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.