தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 48 மீனவக் கடற்கரை கிராமங்களில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து நடத்துவது தொடர்பாக சைமன் பவுன்டேஷன் நிர்வாகிகள், சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.



இந்த சந்திப்பில் சைமன் பவுன்டேஷன் கன்னியாகுமரி மாவட்டப் பொருளாளர் ஜீவன்ராஜ் மற்றும் கல்வி இயக்குநர் டாக்டர் ஜான் மெஜல் ஆகியோர் பங்கேற்றனர். ஆலோசனையின்போது, 48 மீனவக் கடற்கரை கிராமங்களிலும் கட்டமைக்கப்பட்ட முறையில் சட்ட விழிப்புணர்வு முகாம்கள், கருத்தரங்குகள் மற்றும் பொதுமக்களுக்கான சட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.



மேலும், மீனவ மக்களுக்கு அவர்களது சட்ட உரிமைகள், அரசு நலத்திட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சமூக நலச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்ட அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.