மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி குமரன் நகரில் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஹசன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சேக் முகமது ஜலால் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.
புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கிய மாவட்ட செயலாளர் ஹசன், கட்சி வழங்கியுள்ள பொறுப்புகளை உணர்வுடன் ஏற்று, மக்கள் நலப் பணிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தலைவர் பாபி, துணைத் தலைவர் மணிராஜ், செயலாளர் தாமஸ், துணைச் செயலாளர் பெருமாள், பொருளாளர் பொன்னி, மணிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.