தூத்துக்குடியில் மாநகர திமுக சார்பில் டாக்டர். கலைஞரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை திருச்செந்தூர் சாலை காமராஜர் கல்லூரி எதிரே அமைந்துள்ள ஆறுமுக நாடார் ராஜம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் சமூக நலத்துறை அமைச்சரும், திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு இரத்ததான முகாமினை தொடங்கியது வைத்து சிறப்புரை ஆற்றினார்.


நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலேஷ், பிரையன்ட் நகர் பகுதி திமுக செயலாளரும், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவரும், கவுன்சிலருமான ராமகிருஷ்ணன், 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார், திமுக மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் அருண்குமார், 48 வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன், 44 வது வார்டு வட்ட செயலாளர் சுப்பையா, 49 வது வார்டு வட்ட செயலாளர் மூக்கையா, பிரையன்ட் நகர் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் குமார், 45 வது வார்டு வட்ட பிரதிநிதி பச்சை பெருமாள், பிரையன்ட் நகர் விவசாய அணி அமைப்பாளர் பெரிய நாயகம், பிரையன்ட் பகுதி நெசவாளர் அணி அமைப்பாளர் இசக்கி துரை, 44 வது வட்ட பிரதிநிதி சரவணன், தொண்டர் அணி அமைப்பாளர் க. செந்தில்குமார், முத்தையா புரம் பகுதி மேகநாதன், 45 வது வார்டு பிரதிநிதி சுப்பிரமணிய கட்டபொம்மு, உட்பட கழக செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


முகாமில் 102 இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.