ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கட்சியினருடனான SIR கணக்கெடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு, கணக்கெடுப்பு பணிகள் தெளிவாகவும் சீர்பாடாகவும் நடைபெற வேண்டும் என கூறினார்.

SIR கணக்கெடுப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் BLA-2 அல்லது BLO மூலம் தெரிவிக்கலாம் என ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அலுவலர் கல்யாண்குமார் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் புவனேஷ்வரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் / வட்டாட்சியர் சண்முகவேலு, ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயக்கொடி, எஸ்.ஆர். சுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், ஆரைக்குளம் சமுத்திரவேல் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கணக்கெடுப்பு பணிகளை துல்லியமாக நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.