ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் கூட்டுடன்காடு அய்யனார்குளம் பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞரின் 102 வது பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் அரசின் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோ. சண்முக நாராயணன் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் S.P. ராஜ், பொன் ஜோசுவா, சங்கர் வடிவேல்நாதன், விஜய், செல்வராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தலைமை கழக பேச்சாளர் ஆத்தூர் பாலசுப்பிரமணியன், தலைமை கழக இளம் பேச்சாளர் கோ. சண்முக நாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

ஒன்றிய செயலாளர் K.K.R. ஜெயக்கொடி, தலைமை செயற்குழு உறுப்பினர் மாடசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மிக்கேல்அருள் ஸ்டாலின், ஒன்றிய கழக நிர்வாகிகள் அவைத்தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய துணை செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், ஏஞ்சலின் ஜெனிட்டா மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், செல்வின், மாவட்ட விவசாய அணி கோபால், வர்த்தக அணி செல்வின், ஜெயக்குமார் தகவல் தொழில்நுட்ப அணி சின்னத்துரை பாண்டியன், நெசவாளர் அணி மைக்கேல்ராஜ், தொண்டர் அணி கபிரியேல் சைமன், மகளிர் அணி மீனாட்சி, மத்திய ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மகேந்திரன், பொன் செல்வன், மாரிமுத்து மணிகண்டன், ஜெகன், வரலட்சுமி, விஜய்பாரதி, அன்பரசன், பால்ராஜ் சௌந்தர்ராஜன், சிவராஜ், ஜெயசிங், கிருபாகரன், மொபட்ராஜன், கூட்டுடன்காடு ஊராட்சி கிளைக் கழக செயலாளர்கள் கணபதி, சீனிவாசன், கல்லாத்தான் செல்வம், சேரந் தையன், இசக்கிராஜா, இசக்கிமுத்து ராமசாமி, வள்ளிநாயகம், ரவிக்குமார், மகாராஜன், லட்சுமணபிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மகாலிங்கம் நன்றியுரையாற்றினார்.