தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் (பதிவு எண் 53/89 – 1985) சார்பில், ஜனவரி 20 இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது. சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
2021 தேர்தல் கால வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட வரிசை எண் 313ன்படி, சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், உதவியாளருக்கு ரூ.1 லட்சமும் வழங்க வேண்டும். சமையல் அம்ச ஊழியர்களின் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜனவரி 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் மறியல் போராட்டமும், 24 மற்றும் 25 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என சங்கம் அறிவித்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் தெற்கு காவல் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பாக சத்துணவு ஊழியர்கள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து, பேருந்துகளில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் M.பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் T.ஆனந்தசெல்வம், A.அன்னம்மாள், மாவட்ட இணைச் செயலாளர்கள் S.வேல்முருகன், T.பாஸ்கர், A.பிளாரன்ஸ், முத்துமணி, D.மோகனா, J.விஜயராணி, G.பொன்னரசி, மாநில செயற்குழு உறுப்பினர் I.உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், தே.முருகன் (மாநில துணைத் தலைவர் – TNGEA), த. ஜெயபாக்கியம் (மாவட்ட செயலாளர்), B.சங்கர் (மாவட்ட தலைவர் – தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கம்), அ.சாம் டேனியல் ராஜ் (மாநில துணைத் தலைவர் – தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கம்), G. ஞானராஜ் (மாவட்ட செயலாளர் – தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம்), பிரான்சிஸ் (மாநில செயற்குழு உறுப்பினர் – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்), கோ. ஹரிபாலகிருஷ்ணன் (மாநில துணைத் தலைவர் – தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம்), A.அன்பு செல்வம் (தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம்), இல. இராமமூர்த்தி (மாவட்ட செயலாளர் – தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம்), கணேசன் (மண்டல செயலாளர் – டான்சாக்), தவமணி பீட்டர் (தூத்துக்குடி வட்ட செயலாளர் – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்), மனோகரன் (மாவட்ட செயலாளர் – தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம்), சோ. மகேந்திரபிரபு (மாவட்ட தலைவர் – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்), மு.தமிழரசன் (மேனாள் மாநில துணைத் தலைவர்), N. வெங்கடேசன் (மேனாள் மாநில துணை பொதுச் செயலாளர் – TNGEA), R.ஜெயசித்ரா (மாவட்ட பொருளாளர்) உள்ளிட்ட பல்வேறு துறைவாரி சங்கங்கள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தமும், போராட்டங்களும் தொடரும் என சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.