தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் ரூ.47.60 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்தப் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் துவக்கிவைத்தார்.
நிகழ்வில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அழகுராஜ், ஒன்றிய அவைத்தலைவர் பொன்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் வெம்பூர், அயன்கரிசல்குளம், மாவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 363 குடியிருப்புகளுக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தின் நிலையை G.V. மார்கண்டேயன் நேரில் ஆய்வு செய்தார். குடிநீர் சேமிப்புத் தொட்டிகள், குழாய் இணைப்புகள், நீர்விநியோக முறை உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து, தேவையான திருத்தங்களை வேகமாகச் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்களின் கோரிக்கைகளையும் நேரில் கேட்டறிந்தார்.
ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், துணை பொறியாளர் சிவபாலன், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்தனர்.
அதேபோல், விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையத்தில் விளாத்திகுளம்–புதூர் கந்தசாமிபுரம் மற்றும் விளாத்திகுளம்–பெருநாழி கீழநம்பிபுரம் பாதைகளுக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட இரண்டு மகளிர் விடியல் பேருந்துகள் இன்று துவக்கிவிடப்பட்டன. பேருந்துகளை G.V. மார்கண்டேயன் கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது.
நிகழ்வில் தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், துணை மேலாளர் சண்முகம், விளாத்திகுளம் பணிமனை மேலாளர் A.M. சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், இம்மானுவேல், மும்மூர்த்தி, செல்வராஜ், கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், மாணவரணி மற்றும் கலைஅணி நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளின் சாலை வசதி, குடிநீர் விநியோகம், போக்குவரத்து சேவை விரிவாக்கம் போன்ற துறைகளில் புதிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஒரே நாளில் பல்வேறு மக்கள் நலப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தூத்துக்குடி
விளாத்திகுளத்தில் மேம்பாட்டுக்கு புதிய வேகம் – G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ முன்முயற்சியில் சாலை, குடிநீர், போக்குவரத்து சேவைகள் விரிவாக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: திறமைக்கு வணக்கம், சேவைக்கு பாராட்டு - முதலமைச்சர் ஸ்டாலின் மாநில விருதுகள் வழங்கி கௌரவிப்பு!!
அடுத்த
அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தேர்மாறன் 273-ஆம் பிறந்த நாள் முப்பெரும் விழா – நூல் வெளியீடு, நலத்திட்ட உதவிகள் வழங்கல் சிறப்பாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026