தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்சீனி காலனி மற்றும் திரவியரத்தின நகர் பகுதிகளில் அமைக்கப்பட்ட நியாயவிலை கடைகள் திறந்து வைக்கப்பட்டன. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையும் திறக்கப்பட்டது.


இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவி அன்னலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கழக நிர்வாகிகள், மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் திரளாக பங்கேற்றனர்.