தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் வழங்கும் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் வல்லநாடு பகுதியில் உள்ள மாநகராட்சி குடிநீர் ஏற்று நிலையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் கனகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
குடிநீர் விநியோகம் சீராக நடைபெற தேவையான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.