தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வடக்கு மண்டல அலுவலகத்தில் இன்று (02.04.2025) காலை மண்டல கூட்டம் ஆணையர், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

மண்டல கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்கள் வழங்கிய தங்கள் பகுதி குறைகள் குறித்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அலுவலக பணியாளர்களிடம் பரிந்துரை செய்தார். மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார், மண்டல தலைவர் அன்னலெட்சுமி, கவுன்சிலர் ரெங்கசாமி, பொறியாளர் சரவணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.



மண்டல கூட்டம் முடிந்த கையோடு வெயிலையும் பொருட்படுத்தாது மக்களின் நலனில் அக்கறை கொண்டு வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் படும் துன்பங்களை அறிந்து நான்காம் கேட் ரயில்வே பாலம், மற்றும் கீதா ஹோட்டல் எதிரே திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, பதநீர், நுங்கு பானை கரம், எலுமிச்சை பழம் ஜூஸ் போன்ற பானங்களை வழங்கினார்.

பொதுமக்கள் வெயில் தாக்கத்தால் கலைத்து போய் இருந்த நிலையில் மேயர் வழங்கிய பானங்களை மகிழ்ச்சியோடு வாங்கி பருகினார்கள்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் கோட்டு ராஜா, உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.