தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளரான திருமதி கீதா ஜீவன் அவர்கள் இன்று (16.04.2026 - வியாழக்கிழமை) தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
காலை நேரத்தில் தூத்துக்குடி மாநகரம் 9வது வார்டுக்கு உட்பட்ட பூபாலராயர்புரம், வெற்றிவேல் புரம், சாமுவேல் புரம் கிழக்கு மற்றும் மேற்கு, எஸ்.எஸ். மாணிக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு தோறும் சென்று வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த பிரச்சாரத்தில் பகுதி செயலாளர்கள் நிர்மல் ராஜ், ஜெயக்குமார், வட்டச் செயலாளர் கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர் ஜெபஸ்டின் சுதா உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மதியம் தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பு மேற்கொண்டார். அப்போது மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மகளிர் அணி நிர்வாகிகள் கவிதா தேவி, ரேவதி, நிர்மலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த பிரச்சாரம் மூலம் பொதுமக்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.