தொடர் விடுமுறைகள் மற்றும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஜனவரி 24 முதல் 27 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 24 நான்காவது சனிக்கிழமை, 25 ஞாயிற்றுக்கிழமை, 26 குடியரசு தினம் ஆகிய விடுமுறைகளுடன், 27ம் தேதி நடைபெறவுள்ள வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் சேர்ந்து, வங்கிக் கிளை சேவைகள் முழுமையாக நிறுத்தப்படுகின்றன.


இந்த காலகட்டத்தில் காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட நேரடி வங்கி சேவைகள் கிடைக்காது. எனவே, வங்கியுடன் தொடர்புடைய முக்கிய மற்றும் அவசர பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.