தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேற்கு மண்டலத்தில் பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு உரையாற்றினார்.


அவர் தனது உரையில் கூட்டணியின் கொள்கைகள், மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் அரசியல் பணிகள் குறித்து விளக்கமாக பேசினார். கூட்டணியை வலுப்படுத்த ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், கழக வழக்கறிஞர் பிரிவு முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம், பகுதி இணைச்செயலாளர் வீரக் கோன், வட்ட செயலாளர் அந்தோனி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த தெருமுனை பிரச்சாரம் அப்பகுதியில் அரசியல் உற்சாகத்தை ஏற்படுத்தியது.