தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் நாடார் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை, நோட்டு புத்தகங்கள் மற்றும் பள்ளிப்பைகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு, ரொக்க பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.
இந்நிகழ்விற்கு ஊர் கட்டளைக்காரர் மிக்கேல் ரெக்ஸ் தலைமை வகித்தார். நாடார் மக்கள் இயக்க தலைவர் சேவியர் முன்னிலை வகித்தார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை, நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பவின் ராஜ், வி.ஐ.பி ஜுவல்லர்ஸ் உரிமையாளர், கே.பி. செல்வா மற்றும் நாடார் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனிட்டன், ரவி, பொன்ராஜ், வில்சன், வழக்கறிஞர் பிரான்சிஸ் சுதன், பாரத் ஆசிரியர், அந்தோணி பிரான்சிஸ், லாரன்ஸ், தருவைகுளம் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், தருவைகுளத்தை சுற்றியுள்ள பாலர்பட்டி, ஏ.எம்.பட்டி, குமாரபுரம், துப்பாஸ்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்நிகழ்வின் மூலம் பயன்பெற்றனர்.