ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக கழக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற குழு தலைவர் மற்றும் தென் மண்டல தேர்தல் பொறுப்பாளர் கனிமொழி கருணாநிதி தலைமையேற்றார்.
நிகழ்வில் காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வி. சண்முகம், மதிமுக முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை இரவிச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகாபூப், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்த சேகரன், தூத்துக்குடி மாநகர மேயர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, கழக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுக பெருமாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாநகர் முரளிதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் மீராசா, விசிக மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், தெற்கு மாவட்ட செயலாளர் டிலைட்டா ரவி, வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் ஆசாத், மாவட்ட தலைவர் அகமது இக்பால், மாவட்ட செயலாளர் யூசுப், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் காயல் முருகேசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி, ஆதி தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் நம்பிராஜ் பாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் ஊர்க்காவலன், திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் கோ.முருகன், மாவட்ட தலைவர் முனியசாமி, மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் ஜவஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஆவேசமாக பேசிய கனிமொழி கருணாநிதி,
“இந்திய தேர்தல் ஆணையம் இன்று சார்பில்லாத அமைப்பாக இல்லாமல், ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்தில் செயல்படுகிறது. வாக்காளர் பட்டியல் சீராய்வு என்ற பெயரில், எதிர்க்கட்சிகளை குறிவைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சீர்குலைக்கும் செயல்,” என்றார்.
அவரது உரையைத் தொடர்ந்து, “தமிழ்நாட்டில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், மக்களின் வாக்குரிமையை பறிக்க முடியாது. ஜனநாயகத்தை பாஜகவின் பிடியில் வைக்க முடியாது. வாக்குரிமையை காக்கும் இந்தப் போராட்டம் மக்கள் சார்ந்த அரசியல் சக்தியின் வெளிப்பாடாகும்,”
என்று வலியுறுத்தினார்.
அவரது உரையின்போது ஆர்ப்பாட்டம் முழக்கம் முழங்கக் களைகட்டியது. “எஸ்.ஐ.ஆர். ரத்து செய்யப்பட வேண்டும்”, “தேர்தல் ஆணையம் சார்பில்லாமல் செயல்பட வேண்டும்”, “பாஜக ஆட்சி அநீதி ஒழியட்டும்” எனக் கோஷங்கள் எழுந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஒன்றுபட்ட சக்தியை வெளிப்படுத்தியது.
தூத்துக்குடி
“ஜனநாயகத்தை பாஜகவின் பிடியில் வைக்க முடியாது” — கனிமொழி கருணாநிதி ஆவேசம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இளம் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியனுக்கு சட்டத் துறையின் மூத்தோர் வாழ்த்து – தூத்துக்குடியில் சேவைக்கு தயாராகிறார்!
அடுத்த
பொது கிணறு மூடல் காரணமாக மக்கள் அவதி – கிணறு மீண்டும் திறக்க மனு அளித்த பாஜக கிழக்கு மண்டலத் தலைவர் ராஜேஷ் கனி!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026