தமிழகமெங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டை வரவேற்று சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பங்கில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இந்த திருப்பலிக்கு பங்கு தந்தை வின்சென்ட் அடிகளார் தலைமை வகித்தார். உதவி பங்கு தந்தை விவேக் கலந்து கொண்டு சிறப்பித்தார். புத்தாண்டை முன்னிட்டு மாதா சுரூபத்தின் தலையில் வெள்ளி கிரீடம் அணிவிக்கும் நிகழ்ச்சியை உதவி பங்கு தந்தை விவேக் அவர்கள் மேற்கொண்டார். இதில் ஏராளமான இறைமக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அதேபோல், தாளமுத்துநகர் பங்கில் அமைந்துள்ள ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்திலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு இறை அருளுக்காக பிரார்த்தனை செய்தனர்.
புத்தாண்டை ஆன்மிக சிந்தனையுடன் வரவேற்ற இந்நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ சமூகத்தினரிடையே மகிழ்ச்சியும் ஆன்மிக எழுச்சியையும் ஏற்படுத்தின.