தூத்துக்குடி மாவட்டம், மாப்பிளையூரணி ஊராட்சி ஜாஹிர் உசேன் நகரில் இருந்து விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி குழந்தைகள் காயமடைந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த உடன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த குழந்தைகளை சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு உரிய மற்றும் சிறந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என மருத்துவர்களிடம் வலியுறுத்தினார். மேலும் குழந்தைகள் விரைவில் நலமடைய தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்தார்.
இந்த நிகழ்வின்போது உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் தனுஸ்பாலன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பிலோமின் ராஜ், வட்ட செயலாளர் கார்த்திக், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், கிளை செயலாளர் ஜேசுராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.