Breaking News

திமுக ஊழல்களை மறைக்கவே பெருந்தலைவர் காமராஜர் மீது அவதூறு – சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!!

  • Share on
முன்னாள் முதல்வரும், அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவான தலைவருமான பெருந்தலைவர் காமராஜரை அவதூறாக பேசிய யூடியூபரை கண்டித்து, சமுதாய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி முத்தையாபுரம் பஜாரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புலவர் கணேசன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, கோவங்காடு, குலையன்கரிசல், எம். தங்கம்மாள்புரம், ராஜீவ்நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நாடார் சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது காமராஜருக்கு எதிரான அவதூறு பேச்சுகளை கண்டித்து கடும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், “அனைத்து சாதி மக்களுக்கும் பொதுவான தலைவரான பெருந்தலைவரை அவதூறாக பேசப்படுவதை திமுக விரும்புகிறது. இதனை சமுதாய மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்,” என்று தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பேசுகையில், “தான் பெறாத கல்வியை அனைவருக்கும் வழங்கிய தலைவர் காமராஜர். மதிய உணவுத் திட்டம், அணைகள் கட்டுதல், நீர்ப்பாசனத் தொழில்கள் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் ஒன்பது ஆண்டுகள் பொற்கால ஆட்சியை நடத்தினார். எளிமை, நேர்மை, உண்மை ஆகியவற்றின் சிகரமாக விளங்கிய எங்கள் கொள்கைத் தலைவரை அவதூறாக பேசுபவர்களை பாதுகாத்து வருபவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்,” என்றார்.

பாஜக சார்பில் மண்டல பிரபாரி உமரி சத்தியசீலன், அரசு ஊழியர் பிரிவு மாவட்டத் தலைவர் சின்ன தங்கம், தெற்கு மண்டல தலைவர் மாதவன் ஆகியோர் பேசுகையில், “தமிழகத்தில் தங்களது ஊழல்களை மறைக்கவும், போதை கலாச்சாரம், கொலை, கொள்ளை போன்ற பிரச்சினைகளை மறைக்கவும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களை அவதூறாக பேசி வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளை திமுக தொடங்கியுள்ளது. முன்பு திமுக எம்பி திருச்சி சிவா பேசினார், தற்போது யூடியூபர் அவதூறாக பேசியுள்ளார். இதற்கெல்லாம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்,” என்று கூறினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் சுடலைமணி, கவுன்சிலர் வெற்றிச்செல்வன், காங்கிரஸ் சார்பில் முன்னாள் கவுன்சிலர் சாமுவேல் ஞானதுரை, எஸ்.சி./எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவர் பிரபாகரன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் மாசாணம், அனுசுயா, சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் மாலைசூடி எம்.அற்புதராஜ், மாநில நிர்வாகி ஜெபராஜ் டேவிட், புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விக்டர், இனிகோ, பனங்காட்டு படை மாநில வழக்கறிஞர் அணி தலைவர் சிலுவை நாடார், பெருந்தலைவர் மக்கள் நல சங்க நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன், மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ், காமராஜர் பேரவை பிரசன்ன குமார், வெங்கடேச பண்ணையார் பேரவை நிர்வாகி பழையகாயல் வக்கீல் குணசேகரன், விவசாயிகள் சங்க தலைவர் பூபதி, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பொன் தனகரன், முருகேசன், உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் முகேஷ், சண்முகவேல், சிவாகர், குமார், தங்கராஜ், வாஞ்சிநாதன், பேரூரணி வடிவேல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, குலையன்கரிசல், கோவங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் இந்து வியாபாரிகள் சங்க நிர்வாகி தனகராஜ் நன்றி கூறினார்.

  • Share on

முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்புடன் காமராஜரை அவதூறாக விமர்சித்த யூடியூபர் முக்தாரை கைது செய்யக் கோரி முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

ஆட்டோ விபத்தில் காயமடைந்த பள்ளி குழந்தைகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் – ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா!!

  • Share on

Trending News