தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் கீதா ஜீவன், இன்று மாலை நடைபெற்ற பிரச்சாரத்தில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
K.V.K நகர் 4ம் ரயில்வே கேட் அருகில் தொடங்கிய இந்த பிரச்சாரம், 19, 30, 29 ஆகிய வார்டு பகுதிகளில் உற்சாகமாக நடைபெற்றது. தெரு தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோரிய அவர், கூட்டணி கட்சிகளின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கினார்.
பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு உற்சாகத்தை அதிகரித்தனர். வாக்காளர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு ஆதரவைப் பெறும் இந்த தீவிர முயற்சி, தேர்தல் களத்தில் மேலும் சூடு ஏற்றியுள்ளது.