தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டாரம்பட்டி பகுதியில் (09.10.2025) அன்று சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய வழக்கில், தலைமறைவாக இருந்த இரு எதிரிகளை பிடித்து வழக்கை வெற்றிகரமாக முடித்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி அத்திமரப்பட்டியைச் சேர்ந்த குருஸ் அம்புரோஸ் (19), திருநெல்வேலி வி.எம். சத்திரம் பகுதியைச் சேர்ந்த நாகூர்பாண்டியன் (25) ஆகிய இருவரும் குற்றச்செயலுக்குப் பிறகு மறைந்து திரிந்த நிலையில், இவர்களை கைது செய்ய விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் மேற்பார்வையில், சார்பு ஆய்வாளர்கள் சுப்புராஜ், ஜெஸ்லின், தலைமை காவலர் பேச்சிமுத்து, காவலர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் மருதுபாண்டியன் உள்ளிட்டோர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதின் பலனாக, 19.11.2025 அன்று தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோத வெடிகுண்டு தயாரிப்பு வழக்கில் துல்லியமான கண்காணிப்பும் கூர்மையான நடவடிக்கையும் காட்டியதற்காக, இன்று (25.11.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சம்பந்தப்பட்ட போலீசாருக்கு வெகுமதி வழங்கி நேரில் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
தூத்துக்குடி
“தனித்துவமான துரித வேட்டையில் தலைமறைவு எதிரிகளை பிடித்த காவலர்களுக்கு கண்காணிப்பாளர் வாழ்த்து & வெகுமதி!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அண்ணா நகர் பிரதான சாலையில் சீரமைப்பு பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் MLA சண்முகையா — மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026