தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழையால் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி பி.கீதாஜீவன் அவர்கள் பல பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டுக்குட்பட்ட மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலை பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார். அப்போது ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை தரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் கூறியதாவது “கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் புறக்கணிக்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபின், எங்கள் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதன் விளைவாக, கடந்த ஆண்டுகளில் மழைநீர் தேங்கிய பகுதிகள் இம்முறை பெரும்பாலும் பாதிப்பின்றி உள்ளன. சில குறைந்த இடங்களில் மட்டும் மின்மோட்டார் மூலம் நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்றார்.
அவர் மேலும் கூறினார் “கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியின் கீழ் மக்கள் நன்மை அடைந்துள்ளனர். சிறு, குறு சந்து பகுதிகளிலும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்காலம் எப்போதும் தமிழ்நாட்டின் பொற்காலமாகும். எங்கள் திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் நன்மை கிடைப்பதை நோக்கமாகக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எந்த மழை வந்தாலும் மக்களை பாதிக்காத அளவிற்கு இந்த அரசு முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் எந்த வித பயமும் கொள்ளத் தேவையில்லை. எப்போதும் மக்களுக்காகவே பணியாற்றுவது தான் எங்களது கடமை,” என அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தினார்.
ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர், மணி, மாரிமுத்து, அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
“எப்போதும் மக்களுக்காகவே பணியாற்றுவது தான் எங்களது கடமை” — அமைச்சர் கீதாஜீவன்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
அடுத்த
விளாத்திகுளத்தில் நடைபெற்ற திருமண விழாவில் எம்.எல்.ஏ ஜி.வி.மார்கண்டேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்!!
இதையும் படிக்கலாம்
sample
09 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026