கரூர் மாவட்டத்தில் நேற்று (27.09.2025) நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பலர் படுகாயமடைந்ததும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேரதிர்ச்சியான செய்தியை அறிந்து, புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பட்டியல் இன பாதுகாவலர், இளம்புரட்சியாளர் டாக்டர் பூவை எம். ஜெகன் மூர்த்தியார் அவர்கள் இன்று (28.09.2025) கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயிரிழந்தோரின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
மேலும், அவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் கூறி, சிகிச்சை பெற்று வரும் உறவுகளின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும், இந்த துயரம் குடும்பங்களின் மனத்தில் ஆழமான புண்பாடு ஏற்படுத்தியுள்ளதால் அரசு உடனடியாக முழுமையான நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு
கரூர் பேரதிர்ச்சியில் உயிரிழந்தோருக்கு புரட்சி பாரதம் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தியார் அஞ்சலி!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அகிலாண்டபுரத்தில் இயற்கை விவசாயிகள் கருத்தரங்கமும் இலவச மருத்துவ முகாமும்!!
அடுத்த
தூத்துக்குடி நகர முன்னேற்றத்திற்காக – மேயர் ஜெகன் பெரியசாமி தூர் வாரும் பணிகளை ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
“அலைமோதிய ஆதரவு: மேட்டுப்பட்டி பகுதியில் கீதா ஜீவனுக்கு உற்சாக வரவேற்பு – உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு!”
09 Apr 2026
“பத்திரிகையாளர் என்றால் யார்?” தகுதி இல்லா நியமனங்கள் குறித்து அரசுக்கு கேள்வி!!
25 Jan 2026
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த துரை வைகோ – முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நினைவு ஆலயம் அமைக்க பரிந்துரை!!
09 Nov 2025
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
09 Nov 2025