பிரையன்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று காலை பிரையன்ட் நகர் 5 வது தெருவில் அமைந்துள்ள பெருந்தலைவர் கு. காமராஜர் மஹாலில் வைத்து நடைபெற்றது.


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவரும், பிரையன்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவருமான வெற்றி ராஜன் தலைமை தாங்கினார். பிரையன்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்கம் செயலாளர் சுகன்யா. செந்தில்குமார், பொருளாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகர ஏ.எஸ்.பி. மதன் ஐ.பி.எஸ் கலந்து கொண்டு பிரையன்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி சிறப்பு செய்தார்.


நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளர் பீட்டர், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஆலோசகர் பிக்கப் தனபாலன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட பொருளாளர் ஆனந்த் பொன்ராஜ், பிரையன்ட் நகர் வியாபாரிகள் சங்கம் பொருளாளர் ராஜேஷ், வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் அன்பு, செயலாளர் செந்தில்குமார், புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் செயலாளர்கள் கே.பெரியசாமி, முருகன், பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் செல்லுத்துரை (எ) செல்வம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :-
 
நலவாரியத்தில் வணிகர்கள் அனைவரையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

பிரையன்ட் நகர் வியாபாரிகள் சங்கம் ஆண்டு விழாவிவை ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக நடத்திட வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.