தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (National Lok Adalat), மோட்டார் வாகன விபத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றம்–1-ல் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் மாவட்ட நீதிபதி தாண்டவம் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், மோட்டார் வாகன விபத்து வழக்கு சுமூகமான முறையில் முடித்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு நீண்டகால சட்ட நடவடிக் கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மகிழ்ச்சியான தீர்வு கிடைத்தது. இந்த நிகழ்வின் போது வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் வழக்குகளை விரைவாகவும், சுமூகமாகவும் முடித்துக் கொள்ள முடிவது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.