தூத்துக்குடி கீழூர் வி.இ. சாலையில், அந்தோணியார் கோவில் அருகே புதுப்பிக்கப்பட்ட வசந்த் & கோ நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவில், தமிழ்ச்செல்வி வசந்தகுமார் ரிப்பன் வெட்டி புதிய கிளையைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி குத்துவிளக்கேற்றி, விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம்!
புதிய கிளை திறப்பு விழாவை முன்னிட்டு, வாடிக்கை யாளர்களைக் கவரும் வகையில் தங்க நாணயம் இலவசமாக வழங்கும் சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் இச்சலுகை கவனத்தை ஈர்த்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட புதிய கிளையில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக வசதிகள் செய்யப் பட்டுள்ளன. திறப்பு விழாவை முன்னிட்டு நிறுவனத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல் ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல், தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சகாயராஜ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வாடிக்கை யாளர்கள், பொதுமக்கள் மற்றும் வசந்த் & கோ நிறுவன நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் வசந்த் & கோ நிறுவனத்தின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களுக்கு நிறுவனத்தின் சேவைகள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.