இம்மானுவேல் சேகரனின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரனின் திருவுருவப் படத்திற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகள்:
முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகையா, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்கொடி, சரவணக்குமார், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், மேகநாதன், ஜெயக்குமார், ஆஸ்கர், சிவக்குமார், ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டலத் தலைவர் வழக்கறிஞர் பாலகுருசுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அந்தோணி ஸ்டாலின், அம்பாசங்கர், அருணாதேவி, நாகராஜன், அருண்குமார், பழனி, கணேஷ்குமார், பொன்னரசு, மாநகர துணைச் செயலாளர் பிரமிளா, மாநகர அணி நிர்வாகிகள் நைஸ் பரமசிவம், ரவி, பால்ராஜ், மணி, பரமசிவம், வழக்கறிஞர் ரூபராஜா, செந்தில்குமார், டினோ, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், சுரேஷ், தர்மராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.
கவுன்சிலர்கள் விஜயகுமார், சரவணக்குமார், ராஜேந்திரன், வைதேகி, மரியகீதா, மகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், வட்டச் செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, கங்கா ராஜேஷ், சதீஷ்குமார், மூக்கையா, சிங்கராஜ், சக்திவேல், தொகுதி அணி அமைப்பாளர் மாரிச்செல்வம், பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமார், காசிராஜன், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர் மற்றும் இசக்கிமுத்து, அற்புதராஜ், வேல்முருகன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.