தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கண்டித்து, ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற பெயரில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள கண்டனப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் வரும் 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதியில் உள்ள ஆல்வின் மீட்டிங் ஹாலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்குத் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமை தாங்கினார். இந்தியா கூட்டணி சார்பில், தேர்தல் வாக்குத் திருட்டு மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் கண்டித்து, வரும் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு விவிடி சிக்னல் பகுதியில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைமை அறிவுறுத்தலின்படி நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சியினர் திரளாகப் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. பெருமாள்சாமி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் துணைத் தலைவர் சங்கர் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கிப் பேசினர்.
தொடர்ந்து, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அந்தோணி சுரேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் ரஞ்சன், வடக்கு மாவட்ட மதிமுக அவைத்தலைவர் பேச்சிராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், மேலிடப் பொறுப்பாளர் தமிழினியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கே.எஸ். அர்ச்சுனன், மாவட்டச் செயலாளர்கள் கே.பி. ஆறுமுகம், முருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, சிவராமன், மாநகரச் செயலாளர் முத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் பாஜுல் அஸ்ஹாப், மதிமுக நகரச் செயலாளர் முருக பூபதி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்ட ஏற்பாடுகள் குறித்து தங்களது ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.
மேலும், கூட்டத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சேகர், ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், ஏ.டி.எஸ். அருள், கோபால், மைக்கேல் பிரபாகர், ஜான் பிரிட்டோ, ஜேம்ஸ் லாரன்ஸ், ரஞ்சிதம் ஜெபராஜ், ஏ.டி. பிரபாகரன், டேவிட் வசந்தகுமார், நேரு, அசன் பாத், பாலகிருஷ்ணன், பி.ஜே.சி. சுரேஷ், ராதாகிருஷ்ணன், ஏரல் ஜெயராஜ், ஏ.டி. தனசேகரன், பிராங்க்ளின் ஜோஸ், சேவியரம்மாள், பார்த்திபன், சிமியோன், ராஜாராம் முத்துமணி, கணேசன், டோமினிக், இசக்கியம்மாள், பிளசி பியோ வினா, ரெனிஸ் பாபு, ஆலன் ஜோஸ்வா, ராஜ்குமார், தனிஸ் லாஸ், பிராங்க்ளின், பெனட்டிட், சகாய புஷ்பராஜ், ராஜரத்தினம், வேல்குமார், ஜெயபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.