விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த பிள்ளையார் தொட்டியாங்குளம் மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமப் பகுதிகளில் SPEECH தொண்டு நிறுவனம் சார்பில், தூத்துக்குடி சகா கலைக்குழு மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
07.10.2026 அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வியின் அவசியம், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் வளர் இளம் பெண்களுக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கருத்துகள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
இதற்காக சகா கலைக்குழுவினர் வீதி நாடகம், பாடல் மற்றும் நடனம் உள்ளிட்ட கலை வடிவங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தை களின் பாதுகாப்பு தொடர்பான கருத்துகளை பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான முறையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்களும், SPEECH தொண்டு நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்துகளை அறிந்து விழிப்புணர்வு பெற்றனர்.
நிகழ்ச்சி நிறைவில் பொதுமக்கள் தங்களது பின்னூட்டங்களையும் கருத்துகளையும் தெரிவித்தனர். மேலும், SPEECH நிறுவனப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், சகா கலைக்குழுவினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையிலும் அமைந்திருந்ததாக பாராட்டு தெரிவித்ததுடன் நன்றியும் தெரிவித்தனர்.