Breaking News

“வெற்றி கொண்டாடியும், தோல்வியை தாண்டியும் பயணம் தொடரும்” – வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி. கீதாஜீவன் நன்றி அறிக்கை!!

  • Share on

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கு வெற்றி தேடித்தந்த வாக்காளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி. கீதாஜீவன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகளில் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்கள், திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.


தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்த 62,805 வாக்காளர்களின் ஆதரவை அவர் சிறப்பாக நினைவுகூர்ந்தார். வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் சமமாகக் கருதி, கழகத் தலைவர் வழியில் கொள்கை பயணம் தொடரும் என்றும், மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் உறுதியளித்தார்.


மேலும், தேர்தலில் உழைத்த மாவட்டம் முதல் கிளை மட்டம் வரை உள்ள அனைத்து கழக நிர்வாகிகள், சார்பு அணி உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நண்பர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


  • Share on

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் நேரில் சந்திப்பு: தவெக எம்.எல்.ஏ. ஸ்ரீநாத்துக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து!!

இளைஞர் அலை அரசியலை மாற்றும் – புதிய தலைமுறைக்கு வழி திறந்த தேர்தல்!!

  • Share on

Trending News