Breaking News

அதிமுக ஆட்சியில் 6 பேர்… திமுக ஆட்சியில் 300 பேர் வெளிநாடு கல்வி – மடிக்கணினி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!

  • Share on

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிசந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முத்துராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.


இதனைத் தொடர்ந்து 301 மாணவ – மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசினார்.


அவர் பேசுகையில், “தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ‘உலகம் உங்கள் கையில்’ என்ற நோக்கத்துடன் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவே கல்விக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


‘நம் மாநில முதலமைச்சராக இருப்பதை விட, இந்தியாவில் நம் மாநிலம் தமிழ்நாடு என்ற பெயர் உயர வேண்டும்’ என்பதற்காக முதலமைச்சர் தொடர்ந்து உழைத்து வருகிறார். கல்வியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்து கல்வித்திறன் வளர்ச்சியடைந்துள்ளது.


7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் வெளிநாடுகளுக்கு சென்று படித்த மாணவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த எண்ணிக்கை வெறும் 6 பேராக இருந்தது.


இத்தகைய வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்சமூகத்தின் அடுத்த தலைமுறை நீங்கள் தான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என அவர் பேசினார்.


இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் திருமணி ஸ்டாலின், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், வட்டச் செயலாளர் சிங்கராஜ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பேராசிரியர்கள் ஸ்ரீதர், அல்பர்ட் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ – மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் துணை முதல்வர் பாலகங்காதேவி நன்றியுரை நிகழ்த்தினார்.


  • Share on

திராவிட பொங்கல் விழா: தூத்துக்குடியில் மாபெரும் மின்னொளி கபாடி போட்டி – அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!!

பேட்டி மைக் சத்தம் கேட்டதும் சாலை நினைவுக்கு வந்ததா? – பாஜக அறிவிப்பை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாலை திடீர் ஆய்வு!!

  • Share on

Trending News