Breaking News

திராவிட பொங்கல் விழா: தூத்துக்குடியில் மாபெரும் மின்னொளி கபாடி போட்டி – அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!!

  • Share on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தூத்துக்குடி மாவட்ட மண்டல அளவிலான மாபெரும் மின்னொளி கபாடி போட்டி இன்று மாலை தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற பெண்களுக்கான மின்னொளி கபாடி போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தொடங்கி வைத்து, விளையாட்டு வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினார். பெண்களின் விளையாட்டு திறனை வளர்க்கவும், அவர்களை விளையாட்டு துறையில் முன்னேற்றவும் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், நிர்மல் ராஜ், சுரேஷ் குமார், கவுன்சிலர்கள் கந்தசாமி, ஜான், கனகராஜ், ராமர், பொன்னப்பன், கண்ணன், வைதேகி, ஜெய சீலி, பவானி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், வட்ட செயலாளர் சுரேஷ், வழக்கறிஞர் அணி ரூபராஜா, மாநகர சுற்றுச்சூழல் அணி மகேந்திரன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளை பார்வையிட்டனர். மேலும் கழக செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


பெண்களுக்கான இந்த மாபெரும் மின்னொளி கபாடி போட்டியில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 7 அணிகள் பங்கேற்று, தங்கள் விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.


  • Share on

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் – தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள்!!

அதிமுக ஆட்சியில் 6 பேர்… திமுக ஆட்சியில் 300 பேர் வெளிநாடு கல்வி – மடிக்கணினி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!

  • Share on

Trending News