Breaking News

கனிமொழி எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு 399வது வார மரம் நடும் விழா – தூத்துக்குடியில் பசுமை கொண்டாட்டம்!!

  • Share on

ALL CAN TRUST சார்பில் 399வது வார தொடர் மரம் நடும் நிகழ்ச்சி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (04.01.2026) காலை தூத்துக்குடி பிரையன் நகர் – வள்ளி நாயகபுரம் அடுத்துள்ள கோட்ஸ் நகர் பகுதியில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை வளர்ச்சி மற்றும் எதிர்கால தலைமுறைக்கான சுத்தமான சூழலை உருவாக்கும் நோக்கில் ALL CAN TRUST தொடர்ந்து நடத்தி வரும் இந்த மரம் நடும் முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர். 


  • Share on

திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இரு கண்கள் – உப்பள தொழிலாளர் பொங்கல் போனஸ் விழாவில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உரை!!

வல்லநாட்டில் இரண்டாம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி – பள்ளி மாணவ, மாணவியர்கள் உற்சாகப் பங்கேற்பு!!

  • Share on

Trending News