Breaking News

ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா தொடங்கி வைத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்கள்!!

  • Share on

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம்.சி.சண்முகையா அவர்கள், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

தென்னம்பட்டி ஊராட்சி – தென்னம்பட்டி கிராமம்

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தென்னம்பட்டி ஊராட்சியில்,

1. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைத்தள நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணி,

2. மேற்கு தெரு, வடக்கு தெரு மற்றும் சுடலை மாடசாமி கோவில் அருகில் தலா 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று தரைத்தள நீர்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

கொத்தாளி ஊராட்சி – கொத்தாளி கிராமம்

கொத்தாளி ஊராட்சியில்,

1. தெற்கு தெருவில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி,

2. மேற்கு தெருவில் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

கொல்லங்கிணறு ஊராட்சி – கொல்லங்கிணறு கிராமம்

கொல்லங்கிணறு ஊராட்சியில்,

1. கிழக்கு தெருவில் 4.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி,

2. மேற்கு தெருவில் 2.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

மருதன்வாழ்வு ஊராட்சி – மருதன்வாழ்வு & நாரைக்கிணறு கிராமங்கள்

மருதன்வாழ்வு ஊராட்சியில்,

1. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணி,

2. மாரியம்மன் கோவில் தெரு மற்றும் வடக்கு தெருவில் 8.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி,

3. நாரைக்கிணறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணி,

4. நாரைக்கிணறு கிராமத்தில் கிழக்கு தெருவில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பங்கேற்றோர்


இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் யூனியன் சேர்மன் திரு. எல். ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. வெங்கடாச்சலம், உதவி பொறியாளர் திரு. செந்தில், கிராம நிர்வாக அலுவலர் திரு. தர்மராஜ், ஒன்றிய பொருளாளர் திரு. பண்டாரம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண்குமார், ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் திருமதி. பிரியா, இளைஞரணி நிர்வாகிகள் திரு. சரவணகுமார், திரு. கணேசமூர்த்தி, கிளை செயலாளர்கள், ஊராட்சி செயலர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் திரு. முஹம்மது, திரு. ஜோசப் உள்ளிட்ட பலர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் மூலம் குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து மற்றும் பொது பயன்பாட்டு கட்டமைப்புகள் மேம்பட்டு, கிராம மக்களின் வாழ்வாதாரம் மேலும் உயர்வு பெறும் என சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள் தெரிவித்தார்.


  • Share on

புதிய துறைமுக கடற்கரை பகுதி வளர்ச்சிப் பணிகள் – பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும்: மேயர் ஜெகன் பெரியசாமி!!

தென்காசி இந்துமுன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் 19ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!

  • Share on

Trending News