Breaking News

வீரத் தியாகத்தின் நினைவில்… சுதந்திரப் போராட்ட வீரர் கே.எஸ். முத்துசாமி ஆசாரி 53வது நினைவு தினம் அனுசரிப்பு!!

  • Share on

சுதந்திரப் போராட்ட வீரரும், தேசப்பற்றின் உருவகமாகத் திகழ்ந்தவருமான பிரம்மஸ்ரீ கே.எஸ். முத்துசாமி ஆசாரி அவர்களின் 53வது நினைவு தினம் இன்று (16.12.2025) பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள பட்டறை மாடசாமி கோவில் அருகே அனுசரிக்கப்பட்டது.

விருதுநகரின் “இரட்டையர்கள்” எனப் போற்றப்பட்டவர்களில் ஒருவராக விளங்கிய கே.எஸ். முத்துசாமி ஆசாரி, பள்ளிக் காலம் முதலே கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு உற்ற நண்பராக இருந்து வந்தவர். அரசியலில் ஆழ்ந்த தெளிவும், சமூக சிந்தனையும் கொண்ட இவர், கலைச் செயல்பாடுகளிலும் கைதேர்ந்தவராக திகழ்ந்தார்.

வன்முறையை துளியும் விரும்பாத இவர், வன்முறைக்கு இடம் கொடுப்பவர்களை உறுதியுடன் எதிர்த்து நின்ற தியாக மனப்பான்மையுடையவர். தனது 18வது வயதிலேயே கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்ற அவரது தேசப்பற்றை மதித்து, 1972ஆம் ஆண்டு இந்திய அரசால் தாமிரப் பட்டயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த நினைவு தின நிகழ்ச்சியில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், மண்டல் தலைவர்கள் ராஜேஷ், கனி மாதவன், லிங்க செல்வம், ஓபிசி சிறப்பு மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், சமூக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, அணி பிரிவு நிர்வாகிகள் ஜெயக்குமார், உஷா தேவி, லதா, ஞானபிரகாசம், சேர்ம குருமூர்த்தி, சந்தனகுமார், மேற்கு மண்டல் பொதுச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பல்வேறு பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசியோர், கே.எஸ். முத்துசாமி ஆசாரி அவர்களின் தியாக வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டியாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டனர்.


  • Share on

விளாத்திகுளம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை: அடிக்கல் நாட்டிய எம்.சி.சண்முகையா எம்எல்ஏ – தேசிய வேலை உறுதி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு!!

தூத்துக்குடியில் புதிய தார் சாலை, வடிகால் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!

  • Share on

Trending News