Breaking News

விளாத்திகுளம் எம்எல்ஏ G.V.மார்கண்டேயன் பங்கேற்பில் சைவ சித்தாந்த வகுப்பு நிறைவு விழா!!

  • Share on

விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சைவ சித்தாந்த வகுப்பின் நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சைவ சித்தாந்தம் தமிழ்ச் சிந்தனையின் அடித்தளமாக விளங்குகிறது என்றும், இளைஞர்கள் ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மரபுகளை அறிந்து கொள்ள இத்தகைய வகுப்புகள் பெரிதும் உதவுவதாகவும் அவர் கூறினார். மேலும் கல்வியுடன் ஆன்மிக அறிவும் இணைந்தால் சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட சைவ சித்தாந்த அமைப்பாளர் மாரியப்பன், சைவ சித்தாந்த பேராசிரியர் கல்யாணராமன், ஓதுவார் மூர்த்தி, ராமதுரை, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, 3-வது வார்டு செயலாளர் ஸ்டாலின்கென்னடி, பேரூர் கழக இளைஞரணி துணை அமைப்பாளர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவின் முடிவில் சைவ சித்தாந்த வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, விழா நிறைவடைந்தது.


  • Share on

எம்எல்ஏ G.V.மார்கண்டேயன் தொடங்கி வைத்த கீழச்செய்த்தலையில் 10,000 பனை விதைகள் நடும் பசுமை இயக்கம்!!

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல்: எஸ்.டி.கே. ராஜன் அணி பெரும்பான்மை வெற்றி – முன்னாள் லே செயலர் பேட்டி!!

  • Share on

Trending News