தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழச்செய்த்தலை கிராமத்தில் காந்தி கலாம் விதைப்பந்து பேரியக்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை, தமிழ்நாடு விவசாயிகள் இணைந்து நீர் வழித்தடங்களில் மரக்கன்றுகள் மற்றும் 10,000 பனை விதைகள், விதைப்பந்துகள் நடும் பசுமை இயக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார். நீர் வளங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்தவும், எதிர்கால தலைமுறைக்கு பசுமையான சூழலை உருவாக்கவும் இத்தகைய பசுமை முயற்சிகள் அவசியமானவை என அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சுப்புலட்சுமி புவிராஜ், வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்த், கிளைச் செயலாளர்கள் அழகுராஜ், பெருமாள், கணேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.