Breaking News

சுதந்திர போராட்ட வீரர் பாண்டியபதி தேர்மாறன் பிறந்தநாள்: முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மரியாதை!!

  • Share on

சுதந்திர போராட்ட வீரர் பாண்டியபதி 16வது மன்னர் தேர்மாறன் 273வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி லசால் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பாண்டியபதி நினைவிடத்தில் அதிமுக வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மரியாதை செலுத்தினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் வழிகாட்டலின் பேரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பாண்டியபதி தேர்மாறனின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அதிமுக வர்த்தக அணி துணை செயலாளர் மில்லர் R.L. ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அகஸ்டின் Ex.MC, முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் ஜோசப், Ex. மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ் Ex.MC, மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், முன்னாள் அம்மா பேரவை இணை செயலாளர் சி.த.செ.ஜெபசிங், முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் தெர்மல் முருகேசன், வட்ட செயலாளர் அந்தோனி, முன்னாள் வட்ட செயலாளர் லோகு கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், சண்முகராஜ், பேச்சியப்பன் ஆகியோரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.


  • Share on

“அதிகாரம் அல்ல, அன்பு பேசும் அரசியல்… முகாமில் பொதுமக்களுடன் உணவருந்திய சண்முகையா எம்எல்ஏ”

விவசாயமே நாட்டின் உயிர்நாடி – 90 நாட்கள் விற்பனை கண்காட்சி துவக்கத்தில் மேயர் ஜெகன் உரை!!

  • Share on

Trending News