தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் இன்று காலை மாநகராட்சி ஏற்பாட்டில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.
முகாமில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள சாலை, குடிநீர், கழிவுநீர், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மனுக்களாக அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர், ஒவ்வொரு கோரிக்கையையும் தனிப்பட்ட முறையில் பரிசீலித்து, அதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, கீதா முருகேசன், மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் பல்வேறு துறைகளின் பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உறுதி தெரிவித்தனர்.
பொதுமக்களின் நலனை முன்னிலைப்படுத்தி தொடர்ந்து குறைதீர்க்கும் முகாம்களை நடத்தி, மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.